முட்டைகோஸ் வடை 2

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்

பெரிய வெங்காயம் - 2

முட்டைகோஸ் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சைகொத்தமல்லி - சிறிதளவு

இஞ்சி - ஒரு துண்டு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

முட்டைகோஸை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஊறிய உளுத்தம் பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக பூத்து வரும்படி உப்பு போட்டு அரைக்க வேண்டும்.

அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, முட்டைகோஸ் கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை மாவுடன் ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் வடையாகத் தட்டி இருபுறமும் சிவந்தவுடன் பொன்னிறமாக எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: