மசாலா பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 3 கப்

கடலை மாவு - 2 1/2 கப்

வெங்காயம் - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 6

கறிவேப்பிலை - 1/2 கப்

சூடான நெய் அல்லது எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கீழ்க்கண்ட பொருள்களை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பட்டை-1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கிராம்பு - 1

பூண்டு பற்கள் - 15

சீரகம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

மாவுகளை சலித்து உப்பு, சூடான நெய், நீளவாக்கில் மெல்லியதாக அரிந்த வெங்காயம், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த மசாலா அனைத்தையும் சேர்த்து போதுமான தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

மிதமான சூட்டில்,சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: