பாலக் கீரை வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை இலைகள் - 15

கடலைமாவு - 3 தேக்கரண்டி

சோளமாவு - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்த்தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

கரம் மசாலத்தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்றாக கழுவி வைக்கவும்

கடலைமாவு, சோளமாவு , மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் ,இஞ்சி பூண்டு விழுது ,கரம் மசாலத்தூள், உப்பு, தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் ஒவ்வறு இலைகளாக முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: