பாலக் கட்லெட்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது) - 1 கட்டு

உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 3

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 1 அங்குலம்

பிரட் ஸ்லைஸ் - 2 (ஓரங்களை நிக்கிவிடவும்)

சீஸ் துருவல் - 1/2 கப்

மைதா மாவு (இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்) - 1/2 கப்

ப்ரட் தூள் - 1/2 கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இஞ்சியையும் பச்சைமிளகாயையும் நைசாக அரைக்கவும்.

2 கப் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கீரையை 2 - 3 நிமிடம் போட்டு மூடிவைக்கவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு கீரையை நைசாக அரைத்தெடுக்கவும்.

பிரட் ஸ்லைஸை நீரில் முக்கி பிழிந்து எடுத்து வைக்கவும்.

கீரை கலவையுடன் உருளைக்கிழங்கு, உப்பு, சீஸ், இஞ்சி மிளகாய் விழுது, ப்ரட் சேர்த்து பிசையவும்.

சிறிது சிறிதாக எடுத்து வேண்டிய வடிவில் செய்து மைதா மாவு கரைசலில் முக்கி ப்ரட் தூளில் பிரட்டி சூடான எண்ணையில் பொரிக்க சுவையான சூப்பர் கட்லெட் ரெடி.

குறிப்புகள்: