பாசிப்பருப்பு வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 கப்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 4

கறிவேப்பிலை – 5 இலை

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பினை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

பின்னர் பாசிப்பருப்பை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

அரைத்து வைத்துள்ள பாசிபருப்புடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவினை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: