பாகற்காய் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 1

பெரிய வெங்காயம் - 3

கறிவேப்பிலை - 2 இனுக்கு

பஜ்ஜி மாவு மிக்ஸ் - 250 கிராம்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாகற்காயை இரண்டாக நறுக்கி நடுவில் உள்ள விதையை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வெங்காயம் கறிவேப்பிலையுடன் நறுக்கிய பாகற்காய், உப்பு; பஜ்ஜி மாவு சேர்த்து தண்ணீரை தெளித்து பிசையவும். மீண்டும் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை உதிர்த்து போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: