சேனை சிப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ

மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

சேனைக்கிழங்கை தோல் சீவி நீளமாக லேசான சதுரத்துண்டுகளாக நறுக்கி கடாயில் ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு கிழங்கை போட்டு உப்பு சேர்த்து அரை பாகம் வேக விடவும்.

வேக வைத்த கிழங்கு தண்ணீரை வடிக்கட்டி மிளகாய்ப்பொடி, கார்ன் ஃப்ளார் போட்டு பிசறி அரை மணி நேரம் ஊற விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: