சீரணி முறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - அரைப்படி

உளுந்து - 1/4 கிலோ

உடைத்த பொரிகடலை - 50 கிராம்

பெருங்காயம் - சிறிது

எள் - 2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சை அரிசியைத் தண்ணீரில் நன்கு கழுவி ஈரச்சத்து நீங்கும் வரை வெய்யிலில் காய வைக்கவும். அதிகம் காய்ந்தால் முறுகி விடும் சீக்கிரம் எடுத்து விடவும்.

உளுந்தைக் கழுவி சட்டியில் போட்டு நிறம் இலேசாக மாறும்வரை வறுத்து போடித்து அரிசியில் போட்டு கடலையையும் சுத்தம் செய்து போட்டு மிஷினில் பவுடர் போல் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்து வந்த மாவில் தேவையான உப்பையும், பெருங்காயத்தையும் நன்றாக ஊற வைத்து கரைத்து ஊற்றி எள்ளையும் கழுவி அதில் போட்டுப் பிசையவும்.

பிழியும் அளவு மாவைக் கெட்டியாக வைத்துக் கொள்ளவும்.

மாவை தண்ணீராக ஆக்கிவிட்டால் முறுக்கு கெட்டுவிடும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய்யை ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும்.

மூன்று கண் முறுக்குத் தட்டில் மாவை வைத்து அடுப்பில் இருக்கும் எண்ணெய்யில் நேரடியாகப் பிழியவும்.

தட்டில் பிழியக் கூடாது. அதிகம் சிவக்க விடாமல் முறுக்கை எடுத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: