சீடை (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

வெண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி

எள் அல்லது சீரகம் - 2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து இடித்து பொடிக்கண் சல்லடையில் 2 தடவை கப்பி விழாமல் சலித்து எடுக்கவும்.

உளுந்தம் பருப்பை சிவக்க வறுத்துத் திரிக்கவும். எள்ளை சுத்தம் செய்து கொள்ளவும்.

பச்சரிசிமாவுடன்,உளுத்தமாவையும் கலந்து அதனுடன் சோடா உப்பு, எள், துருவிய தேங்காய் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இதனுடன் பெருங்காயம், உப்பு கரைத்த தண்ணீரைத் தெளித்து கட்டியாக, மாவை உருட்டும் பக்குவத்திற்குப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

இரண்டு ஈட்டுக்கு உருட்டிக் கொண்டு பின் எண்ணெயைக் காயவைத்து சீடைகளைப் போட்டு சத்தம் நின்று நன்றாக சிவக்க வேகந்ததும் எடுக்கவும்.

சீடைகளை வழுவழுப்பாக உருட்டாமல், ஒரு கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொண்டு அதிலிருந்து பிய்த்துப் போடவும்.

குறிப்புகள்: