சிக்கன் நக்கேட்ஸ்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிரட்டிவைக்கவும்:

எலும்பு நீக்கிய கோழிக்கறி - 1/2 கிலோ

பூண்டுதூள் - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - 1 தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி

முட்டை - 2

ரொட்டிதூள் - 1/2 கிலோ

உப்பு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

கோழிக்கறியை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஊற வைக்க சொன்ன பொருள்களுடன் சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் வைக்கவும்.

முட்டையை கலக்கி வைக்கவும்.

ஒவ்வொரு துண்டாக முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

குறிப்புகள்: