சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளி கிழங்கு - 1/2 கிலோ

தினை மாவு - 150 கிராம்

பொட்டு கடலை மாவு - 100 கிராம்

வெல்லம் - 50 கிராம்

தேங்காய் - 1 மூடி

ஏலக்காய் - 2

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து கல், தூசிபோக வடிகட்டவும்.

வேகவைத்த கிழங்குடன் தினை மாவு, பொட்டுக்கடலை மாவு, துருவிய தேங்காய், வெல்ல தண்ணீர், ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போண்டா மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து ஊற்றி, பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: