கிட்ஸ் வாழைப்பூ வடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 1 கப்

சுத்தம் செய்த வாழைப்பூ - 1/2 கப்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பூவினை சுத்தம் செய்யவும். வாழைப்பூவை மேல் தோலை நீக்கி விட்டு அதில் உள்ள சிறு சிறு பூக்களை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பூவின் நடுவில் இருக்கும் நரம்பையும், அதனுடன் உள்ள காம்பினை மட்டும் தனியாக எடுத்து விடவும்.

அதன் பின்னர் பூக்களை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொள்ளவும்.(சிலர் மோரில் கூட போடுவார்கள் நிறம் மாறாமல் இருக்க)

கடலைப்பருப்பினை 2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

கடலைப் பருப்பில் இருந்து தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

கடைசியில் இத்துடன் வாழைப்பூவினை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயத்தினை பொடியாக அரிந்து வைக்கவும்.

இப்பொழுது அரைத்த கலவை, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதனை சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் நன்றாக மொருமொருப்பாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: