கிட்ஸ் ஜவ்வரிசி வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 1 கப்

உருளைக்கிழங்கு – 1

அரிசி மாவு – 2 தேக்கரண்டி

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

சீரகம் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 - 6 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.

ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியை தண்ணீரில்லாமல் சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியில் தண்ணீர் அதிகம் இருந்தால் வடையில் எண்ணெய் அதிகமாக இருக்கும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஜவ்வரிசியுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக சேரும்படி நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் பொரிந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: