காரப் பூந்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/4 கிலோ

அரிசி மாவு - 200 கிராம்

முந்திரி பருப்பு - 50 கிராம்

பச்சரிசி மாவு - 50 கிராம்

வற்றல்தூள் - காரத்திற்கு ஏற்ப

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு தூள் - தேவையான அளவு

செய்முறை:

இரண்டு மாவையும் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எண்ணெயின் மேல் பெரிய கண் கரண்டியைப் பிடித்துக் கொண்டு ஒரு கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாகத் தேய்த்து விடவும்.

மாவு மேலே விழாமல் கண்கரண்டியை எடுத்து விட வேண்டும். காராப்பூந்தி எண்ணெய்க்கு மேலே மிதந்து வந்ததும் அரித்து எடுத்து கண் தட்டில் வடியவைக்கவும். இதேபோல் மீதி மாவையும் சுட்டு எடுக்கவும். அதில் வற்றல் தூள், உப்புத்தூள் கலக்கவும்.

ஒரு தேக்கரண்டி நெய்யில் பாதியாக ஒடித்த முந்திரிப்பருப்பு கருவேப்பிலை வறுத்துப் போடவும்.

குறிப்புகள்: