காய்கறி கட்லெட்

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு - 1/4 கிலோ

பீட்ரூட் - 2 என்னம்

கேரட் - 2 என்னம்

பச்சை பட்டாணி - 100 கிராம்

நிலக்கடலை (வறுத்து பொடித்தது) - 2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

தனியா பவுடர் - 1/4 தேக்கரண்டி

மைதா - 2 தேக்கரண்டி

ரவை - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 என்னம்

கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை கழுவி கொஞ்சம் பெரியதாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைக்கவும்.

மைதாவை சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் செய்யவும்.

வேகவைத்த காய்களை நன்றாக மசிக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள்,பொடித்த நிலக்கடலை, கரம் மசாலா தூள், தனியா தூள், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், உப்பு போட்டு நன்றாக கலந்து சிறு உருண்டையாக செய்து வடை போல தட்டி மைதாமாவில் முக்கி ரவையில் பிரட்டி வாணலியில் காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான காய்கறி கட்லட் ரெடி.

குறிப்புகள்:

டொமொட்டொ கெச்சப்புடன் சாப்பிட ருசியாக இருக்கும்.