கட்டோரி சாட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கட்டோரி செய்ய:

மைதா - 1 கப்

ரவை - 2 தேக்கரண்டி

ஓமம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவையான அளவு

ஸ்டஃபிங் செய்ய:

பட்டாணி (அல்லது) வெள்ளை கொண்டைக்கடலை - 1/2 கப்

வெங்காயம் - 1

உருளைக்கிழங்கு - 2 சின்னது

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

மேலே தூவ:

கொத்தமல்லி இலை - தேவைக்கு

சேவை - தேவைக்கு

சாட் மசாலா - தேவைக்கு

செய்முறை:

மைதா, ரவை, உப்பு, ஓமம் கலந்து தேவையான நீர் விட்டு பிசைந்து வைக்கவும். பட்டாணி, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுக்கவும்.

மைதாவை திரட்டி வட்டங்களாக வெட்டி எடுக்கவும். அல்லது சின்ன சின்ன வட்டங்களாக ஒரே அளவில் தேய்த்து வைக்கவும்.

எந்த கப்பின் வடிவத்தை கொடுக்க விரும்புகிறோமோ அந்த கப்பின் பின் பக்கத்தில் இந்த மாவை ஒட்டி ஓரங்களை மடித்து விடவும்.

பின் அதன் மேல் ஃபோர்க் கொண்டு குத்தி விடவும். அப்போது தான் பூரியாக உப்பி வராமல் இருக்கும்.

இனி கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடுக்கி கொண்டு கப்களின் வாய் பகுதியை பிடித்து கொண்டு எண்ணெயில் விடவும். லேசாக கத்தியால் மாவை கப்பிலிருந்து விலக்கி விடவும். இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுக்கவும். இப்போது சாட் நிரப்ப கட்டோரி தயார்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதில் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி தேவையான உப்பு சேர்த்து வேக வைத்த பட்டாணி, உருளை சேர்த்து கலந்து எடுக்கவும்.

இனி கட்டோரியில் உருளை பட்டாணி கலவையை நிரப்பி மேலே விருப்பம் போல் கொத்தமல்லி இலை, சேவ், சாட் மசாலா தூவி சூடாக உடனே பரிமாறவும்.

குறிப்புகள்:

கலவையை உள்ளே வைத்த பின் தாமதிக்காமல் பரிமாறுவது அவசியம், இல்லை எனில் கட்டோரி ஊறி நமத்தது போல் ஆகி விடும்.