வேர்க்கடலை தேங்காய் பர்பி செய்முறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 100 கிராம்

துருவிய தேங்காய் - ஒரு மூடி

சர்க்கரை - 200 கிராம்

வெண்ணை - 100 கிராம்

கடலை மாவு - 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 3

செய்முறை:

வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்து தோல் நீக்கவும்.

தேங்காயைத்துருவி ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைக்கவும்.

கடலையை மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும்.

ஒருகடாயில் சர்க்கரையைப்போட்டு மூழ்கும் அளவுதண்ணீர் ஊற்றவும்

சர்க்கரை கொதிக்க ஆரம்பித்ததும்கெட்டி பாகுபதம்வரும் பக்குவத்தில்தேங்காய்ப்பூ, வேர்க்கடலைப்பொடிசேர்த்து க்கைவிடாமல் கிளறவும்.

கெட்டியாக திரண்டுவரும் சமயம் கடலைமாவைத்தூவி கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்சமயம் ஏலக்காய்ப்பொடி தூவி இறக்கி நெய்தடவியதாம்பாளத்தில் கொட்டி ஆறிய பின்பு துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: