ரவை பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

பயற்றம்பருப்பு - 1 தேக்கரண்டி

வெல்லம் - எலுமிச்சை அளவு

பால் - 1/2 கப்

முந்திரிப்பருப்பு - 5

ஏலக்காய் - 2

கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

வெல்லத்தை பொடியாக சீவி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

ரவையை வறுத்தவுடன் தண்ணீர் சேர்த்து கிளறிக் கொண்டே பயற்றம் பருப்பையும் போடவும்.

ரவையும், பருப்பும் நன்கு வெந்தவுடன் வெல்லத்தை சேர்த்து வாசனை அடங்கும் வரை கிளறி, அதனுடன் கேசரிப்பவுடர், ஏலக்காய் சேர்க்கவும்.

பாலை கொதிக்க வைத்து அதில் முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

இந்த பாலை ரவை கலவையுடன் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: