ரவை பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1/4 கிலோ

வாழைப்பழம் - 1

முட்டை - 2

சீனி - தேவையான அளவு

சுடுத்தண்ணீர் - தேவையான அளவு

ஏலக்காய் - 1

சுக்கு - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் ரவையோடு சுடுத்தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து வாழைப்பழம், சுக்கு, ஏலக்காயை தட்டி போட்டு, முட்டையை உடைத்து ஊற்றி, சீனியையும் சேர்த்து நன்கு பிசைந்து ஊற வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் மாவினை ஊற்றவும் (விரும்பிய வடிவில் )

பணியாரம் வெந்து சிவந்த நிறம் வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தேவையானால் சிறிது சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.