மைதா ஸ்வீட்

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

உப்பு - 1 சிட்டிகை

சோடா உப்பு - 1 சிட்டிகை

சர்க்கரை (சீனி) - 1 கப்

எண்ணெய் மற்றும் நெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, சோடா, நெய் சேர்த்து தேவையான நீர் விட்டு சற்று கெட்டியாக பிசையவும்.

இதை சற்று கனமான சப்பாத்தி போல் தேய்த்து, சின்ன சின்ன துண்டுகளாக விரும்பிய வடிவில் வெட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இவற்றை பொரித்து எடுக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு மூழ்கும் அளவு மட்டும் தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் அளவு பாகு காய்ச்சவும்.

இதில் பொரித்து வைத்த துண்டுகளை போட்டு நன்றாக பாகு எல்லா துண்டுகளிலும் படும் படி பிரட்டி எடுத்து ஆரவைத்து பரிமாறவும்

குறிப்புகள்: