மைசூர் பாகு (5)

on on on off off 6 - Good!
3 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 4 தேக்கரண்டி

சர்க்கரை - 8 தேக்கரண்டி

நெய் - 6 தேக்கரண்டி

பால் (condensed/evaporated/half and half/ regular whole milk) - 2 தேக்கரண்டி

செய்முறை:

மைக்ரோ அவனில் (Microwave) 50 நொடி கடலை மாவை வறுத்துக் கொள்ளவும்.

பிறகு மாவு, சர்க்கரை, பால் இவை அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் 15 நொடி அவனில் வைக்கவும்.

இதை உடனேயே நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றவும். 5 நிமிடம் கழித்து வில்லை போட்டு விடவும். நன்கு ஆறிய பின் சாப்பிடவும். மிருதுவான மைசூர் பாகு ரெடி.

அப்படி மிருதுவான மைசூர் பாகு தேவையில்லை என்றால் இன்னும் சிறிது நொடி அவனில் வைத்தால் தடிமனான மைசூர் பாகு கிடைக்கும்.

குறிப்புகள்: