முந்திரி பர்பி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முந்திரிப்பருப்பு - 1 1/2 கப்

கடலை மாவு - 25 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

ஏலக்காய் - 6

நெய் - 20 கிராம்

செய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு அடுப்பில் வைத்து சுட வைக்கவும்.

சூடானதும் கடலை மாவை அதில் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு 50 மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அது பாகானதும் கடலை மாவை அதில் போட்டு நன்கு கிளறவும்.

முந்திரிப் பருப்பைச் சுத்தம் செய்து இரண்டிரண்டாகச் செய்து அதனையும் போடவும். ஏலக்காயைத் தட்டிப் போட்டு நன்றாகக் கிளறவும்.

எல்லாம் நன்றாக சேர்ந்து இறுகியதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பிக் கொள்ளவும்.

சூடு சிறிது ஆறியதும் கத்தியால் சதுரமாகக் கீறி துண்டுகளாக்கிக் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: