ப்ரெட் மில்க் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்

ப்ரெட் - 1 பாக்கெட்

சர்க்கரை - 3/4 கிலோ

நெய் - 4 தேக்கரண்டி

பாதாம், பிஸ்தா, முந்திரி - சிறிதளவு

ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

பாலைக்காய்ச்சி ஆற வைக்கவும்.

ப்ரெட் துண்டுகளை ஓரங்களை வெட்டாமல் சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து எடுக்கவும்.

சர்க்கரையில் 1/4 கப் நீர் சேர்த்து கம்பிப்பாகு வைக்கவும்.

வறுத்த ப்ரெட் துண்டுகளை பாகில் சேர்த்து பாலையும் விட்டுக் கிளறவும்.

அல்வா பதம் வந்ததும் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி அலங்கரிக்கவும்.

குறிப்புகள்: