பூசணிக்காய் அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 1/2 கிலோ

சீனி - 2 1/2 கப்

ஏலக்காய் - 3

டால்டா - 100 கிராம்

நெய் - 2 மேசைக்கரண்டி

கலர் பவுடர் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பூசணிக்காயை தோல் சீவி விட்டு காரட் துருவியை வைத்து துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அழுத்தமான வாயகன்ற பாத்திரத்தில் துருவிய பூசணிக்காயை போட்டு தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

5 நிமிடம் கழித்து பூசணிக்காய் சற்று வதங்கியதும் மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடத்திற்குப் பிறகு மூடியை திறந்து 10 நிமிடம் வதக்கி மூடி விடவும்.

மீண்டும் 5 நிமிடம் கழித்து திறந்து 10 நிமிடம் வதக்கவும். காய் நன்கு வெந்ததும் அதில் சீனியை போட்டு கிளறி விடவும்.

அதனுடன் கலர் பவுடர் போட்டு 15 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். கிளறாமல் விட்டால் அடிபிடித்து விடும்.

கிளறியதும் டால்டா மற்றும் நெய் சேர்த்து 5 நிமிடம் கிளறவும். தீயை குறைந்து வைத்தே செய்யவும்.

அதனுடன் பொடி செய்த ஏலக்காய் தூள் தூவி மற்றும் நறுக்கிய முந்திரி போட்டு கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை 10 நிமிடம் கிளறவும். 10 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும். தேவைப்பட்டால் மேலே நெய் ஊற்றி கொள்ளவும்.

குறிப்புகள்: