பாதாம் பர்பி

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 1 கப் (கோபுரமாக)

தேவையான பால் - தேவையான அளவு

நெய்- முக்கால் கப்

சீனி- 1 1/4 கப்

செய்முறை:

பாதம் பருப்புகளை வென்னீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பிறகு தோலை உரிக்கவும்.

பாலுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

அதை ஒரு வாணலியில் கொட்டி நெய், சீனியைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு மெல்லிய தீயில் 20 நிமிடங்கள் கிளறினால் ஒட்டாத பதம் வரும்.

அப்போது நெய் பிரிய ஆரம்பிக்கும். அப்போது இறக்கவும்.

சூடு ஆறியதும் வில்லைகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: