பாசிப்பருப்பு பாயாசம்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

வெல்லம் - 80 கிராம்

தேங்காய் பால் - 1 கப்

ஏலக்காய் - 2

பாதாம் பருப்பு - 5

செய்முறை:

பாசிப்பருப்பை 15 நிமிடம் ஊற விடவும். வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

ஊற வைத்த பருப்பை குக்கரில் வேக வைத்து, வெந்ததும் நன்கு மசித்து விடவும்.

அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.

பின்பு தேங்காய் பால் விட்டு நன்கு கிளறவும்.

சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார். நெய்யில் வறுத்த பாதாம் தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: