பர்குல் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பர்குல் (Bulgur) - 1 கப்

பால் - 1 கப்

தண்ணீர் - 3 கப்

தேங்காய்பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி

நெய் - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை - 1 கப்

ஏலக்காய் - 10

வறுத்த முந்திரி - 10

கலர்பொடி (விரும்பினால் மட்டும்) - சிட்டிகை

உப்பு - சிட்டிகை

செய்முறை:

பர்குலை,தேங்காய்பால் பவுடர் , பால் ,தண்ணீர் ,உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில்வரை மிதமான தீயில் வேகவிடவும்.

ஏலக்காயை வறுத்து சர்க்கரை சேர்த்து பொடிக்கவும்

வெந்து விசில் அடங்கியதும் சர்க்கரையை கொட்டி கிளறவும்.

ஒட்டும்போது நெய் ஊற்றி கிளறி ஒட்டாத பதம் வந்து சுருளும்போது எடுத்து கொட்டி வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்

குறிப்புகள்: