பப்பாளிக்காய் ஹல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பப்பாளிக்காய் - 1

முந்திரி - 15

கிஸ்மிஸ் - 10

சீனி - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பப்பாளிக்காய் உடைய மேல் தோலை நீக்கி விட்டு கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்.

பின் ஒரு சட்டியில் சிறிது தண்ணீர் ஊற்றி மேலே ஸ்டீமரை வைத்து அதில் துருவிய பப்பாளிக்காயை வேகவைத்து எடுக்கவும்.

பின் வெந்த பப்பாளிக்காயை அடிகனமான ஒரு சட்டியில் போட்டு நன்கு வரட்டிக்கொள்ளவும் அதில் உள்ள தண்ணீர் அனைத்தும் வற்றும் வரைக்கும் வரட்டி பின் சீனி சேர்த்து கிளறவும்.

தீயை மிதமானதாக வைக்கவும்.அடி பிடிக்க ஆரம்பிக்கும் போது நெய் ஊற்றி கிளறவும். நன்கு ஹல்வா பதம் வந்ததும் இறக்குவதற்க்கு முன்னாடி முந்திரி,கிஸ்மிஸ் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: