பனை வெல்லப் பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பனை வெல்லம் - 100 கிராம்

கேழ்வரகு மாவு - 1/2 கப்

கோதுமை மாவு - 1/2 கப்

மைதா மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 1/2 கப்

வாழைப்பழம் - 1

நெய் - 50 கிராம்

தேங்காய்ப் பால் - 1/2 கப்

முந்திரி - 10

செய்முறை:

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் பனை வெல்லத்தை கம்பி பதம் வரும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

இதில் மைதா மாவு, கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, அரிசி மாவு, தேங்காய்ப் பால், ஏலப்பொடி, வாழைப்பழம் ஆகியவற்றைக் கொட்டி இட்லி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

குழிப்பணியாரம் அச்சில் மாவை ஊற்றி 10 நிமிடம் ஆனதும், திருப்பி போட்டு வேகவிடவும்.

குழிபணியாரம் அச்சி மாவினை ஊற்றுவதற்கு முன்பு அச்சில் நெய் விட்டு சூடானதும் மாவை ஊற்ற வேண்டும்.

குறிப்புகள்: