தேங்காய் பர்பி (6)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 3 கப்

சீனி - 2 கப்

முந்திரி - 1/2 கப்

வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

நல்ல முற்றின தேங்காயாகப் பார்த்து எடுத்து துருவிக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 தேக்கரண்டி தண்ணீர் விட்டு அத்துடன் சீனியை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.

சீனி கரைந்து பாகாக மாறும் போது அதில் ஒரு கல் உப்பு சேர்த்து பின் முந்திரி அத்துடன் வதக்கிய தேங்காய் துருவலைப் போட்டு 10 நிமிடம் நன்றாகக் கிளற வேண்டும்.

சீனியும் தேங்காயும் கலந்து பதமாக வந்தவுடன் சூட்டோடு, ஒரு தட்டில் வெண்ணெயை தடவி அதில் கொட்ட வேண்டும்.

கரண்டியால் தட்டில் சமப்படுத்தி கத்தி கொண்டு வெட்டி அழகாக கீறிவிட்டு வைக்கவும்.

பின் 30 நிமிடம் கழித்து நன்கு ஆறியவுடன் தனித்தனி பீசாக எடுத்து பரிமாற மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்புகள்:

அதிக இனிப்பு தேவை என்றால் தேங்காய் துருவலுக்குச் சமமாக சீனியை எடுத்துக் கொள்ளலாம்.