தேங்காய் பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப்

மைதா - 1/4 கப்

பொடித்த சர்க்கரை - 1/4 கப் அல்லது இனிப்புக்கு தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

தேங்காய் துருவலுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து பிசிறவும்.

மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து கைகளால் உருட்டும் அளவுக்கு பிசையவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது)

மாவை விரல் நீளத்தில் உருளைகளாக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: