தக்காளி ஹல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த சிவப்பு நிற தக்காளி - 1/2 கிலோ

சர்க்கரை - 300 கிராம்

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

நெய் - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 4

பாதாம் - 10

முந்திரி - 5

பிஸ்தா - 4

அக்ரூட் - 4

உப்பு - ஒரு பின்ச்

செய்முறை:

பாதாமை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளியின் கொண்டை பகுதியை மட்டும் நறுக்கி விட்டு குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.

தக்காளி வெந்ததும் எடுத்து தோலை உரித்து விட்டு கைகளால் அல்லது ப்ளெண்டரால் நன்கு பிசைந்துக் கொள்ளவும். அதில் ஏலக்காய், உப்பு, வெண்ணெய் போட்டு கிளறி வேக விடவும்.

அதன் பின்னர் வெந்துக் கொண்டிருக்கும் தக்காளியில் பொடி செய்த பாதாம் மற்றும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.

இந்த தக்காளி கலவையில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

சர்க்கரை கரைந்து தண்ணீர் பதத்திற்கு ஆகும் அதனால் சில நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விட்டு தண்ணீரை சுண்ட விடவும்.

ஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பிஸ்தா, முந்திரி, அக்ரூட், கிஸ்மிஸ் பழம் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை இந்த தக்காளி கலவையில் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த தக்காளி ஹல்வா இஸ்லாமிய இல்லங்களில் விசேஷங்களின் போது செய்வது.

இது புளிப்பு இனிப்பு சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.

இதில் மில்க் மெயிட் சேர்த்தும் செய்யலாம்.