ஜவ்வரிசி பாயசம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்

பால் - 3 கப்

ஏலக்காய் - 2

சர்க்கரை - 3/4 கப்

முந்திரி - 6

கிஸ்மிஸ் பழம் - 10

செய்முறை:

ஜவ்வரிசியை லேசாக வறுத்து ஊற வைக்கவும்.

ஊற வைத்ததை குக்கரில் வைத்து ஒரு விசில் விடவும்.

இப்போது பாலை ஏலக்காய் சேர்த்து காய்ச்சி அதில் வெந்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.

கொதிக்கும் போது சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

தனியாக நெய்யில் முந்திரி பொடியாக நறுக்கி போட்டு கிஸ்மிஸ் பழத்தையும் போட்டு வதக்கி சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: