ஜவ்வரிசி அல்வா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்

பால் - 3 கப்

சர்க்கரை - 1 கப்

நெய் - கால் கப்

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு ஜவ்வரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அதில் வறுத்த ஜவ்வரிசியையும் போட்டு நன்கு வேகவிடவும்.

ஜவ்வரிசி நன்கு வெந்தபின் அதில் சர்க்கரையைச் சேர்த்து வேகவிடவும்.

எல்லாம் நன்கு வெந்து, திரண்டு வரும்போது நெய்யினை ஊற்றி நன்கு கிளறி, பிறகு ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவைத்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

குறிப்புகள்: