கல்கண்டு பொங்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பால் - 2 கப்

நீர் - 2 கப்

முந்திரி, திராட்சை - தேவைக்கு

நெய் - 3 மேசைக்கரண்டி

கல்கண்டு - 100 - 150 கிராம் (ஒரு கப்பிற்கு சற்று கூடுதல்)

ஏலக்காய் - 2

செய்முறை:

பச்சரிசியை நன்றாகக் கழுவி 2 கப் நீர் மற்றும் 2 கப் பால் விட்டு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

கல்கண்டுடன் ஏலக்காய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

பொடித்ததை வேக வைத்துள்ள பொங்கலில் சேர்த்து சிறுதீயில் அடுப்பில் வைத்து கிளறவும்.

சிறிது நெய்யில் முந்திரி, திராட்சை வறுக்கவும்.

வறுத்த முந்திரி, திராட்சை மீதம் உள்ள நெய் அனைத்தையும் பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

கல்கண்டு சாதம் / கல்கண்டு பொங்கல் இரண்டுமே ஒன்று தான். அதிகமாக நீர் சேர்த்தால் பொங்கல். அவ்வளவு தான் வித்தியாசம்.

நெய் அளவு கூடினால் இன்னும் சுவையாக இருக்கும். இது திகட்டாமல் இனிப்பு சற்று குறைவாகவே இருக்கும்.

இனிப்பு சுவை அதிகம் விரும்புபவர்கள் கல்கண்டை அதிகமாக சேர்க்கலாம்.