உளுத்தம்பருப்பு பாயாசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்

பால் - 1 கப்

வெல்லம் - 150 கிராம்

தேங்காய் துருவல் - சிறிதளவு

பூண்டு - 6

முந்திரி பருப்பு - 5

திராட்சை - 10

நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

உளுத்தம் பருப்பை கழுவி வைக்கவும். பூண்டை சிறிதாக நறுக்கி வைக்கவும். குக்கரில் தண்ணீர் விட்டு பருப்பு, பூண்டு சேர்த்து 4 அல்லது 5 விசில் வைத்து வேக வைக்கவும்.

பருப்பு நன்றாக வெந்ததும் வெல்லம் சேர்த்து கரைத்து விடவும்.

வெல்லம் கரைந்ததும் பால் சேர்க்கவும்.

ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு திராட்சை, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த திராட்சை, முந்திரியை பாயாசத்தில் சேர்க்கவும்.

கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

உளுந்து, பூண்டு சேர்ப்பதால் மிகவும் சத்தானதாகும்.

பாயாசம் ஆனால் பூண்டு சேர்த்து இருக்கு என்று நினைப்பீர்கள், பூண்டு வாசனை வராது. இதில் பூண்டு சேர்ப்பது தான் ஸ்பெஷல். விரும்பாதவர்கள் சேர்க்க வேண்டாம்.

தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்தும் செய்யலாம். இது திருநெல்வேலி பக்கம் அதிகமாக செய்வார்கள்.