இனிப்பு பணியாரம்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 200 கிராம்

துருவிய தேங்காய் - 1 கப்

வெல்லம் - 200 கிராம்

ஏலக்காய் - 5

உளுந்து - 400 கிராம்

பச்சரிசி - 200 கிராம்

எண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை:

பச்சரிசி, உளுந்து இவற்றை ஒரு மணிநேரம் முன்னதாக ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

பாசிபருப்பையும் 10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.

வெல்லத்தை பாகு போல் காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் தேங்காய் துருவல், ஏலப்பொடி வேக வைத்த பாசிபருப்பை சேர்த்து ஒரு 15 நிமிடம் வரை நன்றாக சுருள கிளறி பின் இறக்கி வைத்து ஆறவிடவும்.

ஆறியவுடன் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொண்டு அரைத்து வைத்துள்ள அரிசி உளுந்து மாவில் நனைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்யை ஊற்றி சூடுவந்தவுடன் நனைத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: