இனிப்பு குழிப் பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

கெட்டி அவல் - 1 கப்

வெல்லம் - 4

ஏலப்பொடி - சிறிது

முந்திரி - சிறிது

செய்முறை:

பச்சரிசி, கெட்டி அவல் இரண்டையும் சேர்த்து நன்கு கெட்டியாய் அரைக்கவும்.

வெல்லத்தில் சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவைக்கவும்.

கரைந்தவுடன் அதை வடிக்கட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.

நன்றாக கொதித்து வரும்போது அதை அரைத்த மாவில் சிறிது, சிறிதாக ஊற்றி நன்றாக கலக்கவும்.

முந்திரிபருப்பினை நறுக்கி நெய்யில் வறுத்துப் போடவும்.சிறிது ஏலப்பொடியும் சேர்க்கவும்.

மாவு பொங்கியதும் குழிப்பணியாரக் கல்லில் நெய் தடவி ஊற்றவும்.

பணியாரம் சிவப்பதற்கு முன், பதமாய் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: