பெப்பர் சிக்கன் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் - 3

தக்காளி - 3

பச்சைமிளகாய் - 3

ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் (இஞ்சி பூண்டு விழுது) - 1 தேக்கரண்டி

மல்லித்தழை - சிறிது

பெப்பர் பவுடர் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு நீளமாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் சேர்க்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் சிக்கனை சேர்த்து மேலும் சிறிது உப்பு சேர்க்கவும்.

நன்கு சுருண்டு வரும் போது மிளகுத் தூள், நறுக்கிய மல்லித்தழை சேர்த்துக்கிளறி இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்: