சிலோன் சிக்கன் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கிலோ

மிளகாய் வற்றல் - 8

தக்காளி - 4

முட்டை - 4

மிளகு - 1 தேக்கரண்டி

மல்லி - 2 மேசைக்கரண்டி

பூண்டு - 2 பல்

வெங்காயம் - 1/4 கிலோ

சீரகம் - 1 மேசைக்கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை தோல் நீக்கித் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல், மிளகு, மல்லி, சீரகம் ஆகியவற்றை லேசாக வதக்கிக் கொள்ளவும்.

வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு மசாலாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கோழித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுதினை போட்டு மேலும் உப்பு, மஞ்சள் தூள், நறுக்கின தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கறி நன்கு வெந்து அதிலுள்ள தண்ணீர் வற்றிய பின்னர் இறக்கி ஆற வைத்து கோழித் துண்டுகளிலுள்ள எலும்புகளை நீக்கவும்.

வாணலியில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு போட்டு அடித்து தனியாக பொடிமாஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் கறித்துண்டுகளைப் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கவும்.

கோழி மசாலாவுடன் முட்டை பொடிமாஸை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: