சிம்பிள் ஆட்டுக்கறி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

நாட்டுத்தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி - 1 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 4 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு - சிறிது.

செய்முறை:

தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

ஆட்டுக்கறியைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறி சேர்த்து வதக்கவும்.

கறி நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, உப்பு, 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

கறி வெந்ததும், மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவி தண்ணீர் நன்கு சுண்டிய பின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: