கிட்ஸ் சிக்கன் ரோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ (சதைப்பகுதி)

புளிக்கரைசல் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

பட்டர் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கன் ஊறியதும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.

நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் பட்டர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வறுத்தெடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சிறு குழந்தைகளுக்கு என்பதால் மிளகுத் தூள் மட்டும் சேர்த்துள்ளேன். விரும்பினால் சிறிது மிளகாய் தூள் சேர்க்கலாம்.

சிக்கன் லெக் பீஸ் மட்டும் சேர்த்துச் செய்தால் குழந்தைகள் கையில் பிடித்துச் சாப்பிட வசதியாக இருக்கும்.