இறால் அவரை பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய இறால் - 10

அவரைக்காய் - 10

வெங்காயம் - 1

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவரைக்காயை மெல்லிய சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய இறாலாக இருப்பதால் இரண்டாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.

பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றிக் கிளறிவிட்டு, இறாலைச் சற்று நேரம் வேகவிடவும்.

தண்ணீர் வற்றி இறால் அரை வேக்காடு வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் அவரைக்காயைச் சேர்த்து பிரட்டவும்.

நன்றாகப் பிரட்டிவிட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

இறால் வெந்ததும் கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: