வெங்காய கோழி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் கீமா - 150 கிராம்

வெங்காயம் - 1

சின்ன வெங்காயம் - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 15 கிராம்

மல்லி விதை - 10 கிராம்

தக்காளி - 2

தக்காளி சாஸ் - 100 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 கிராம்

சட்னி கடலை (பொட்டுக்கடலை) பொடி - 2 கிராம்

முட்டை - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 3 கிராம்

பச்சை மிளகாய் - 2

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

கறிவேப்பில்லை - ஒரு இணுக்கு

கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீரகம், கரம் மசாலா, மல்லி விதை, தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து விழுதாக அரைக்கவும்.

சிக்கன் கீமாவுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மல்லி இலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, பொட்டுகடலை பொடி சேர்த்து பிசறி வைக்கவும்.

இந்த கலவையுடன் முட்டையை நன்கு அடித்து சேர்க்கவும்.

அரை மணி நேரத்திற்கு பின் சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் தாளித்து அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் சிக்கன் உருண்டைகள் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கொதிக்க விடவும்.

சிக்கன் வெந்து எண்ணெய் மேல வந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்: