மட்டன் கடலை பருப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

கடலைப்பருப்பு - 1 கப்

உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

பட்டை - 2

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள:

தேங்காய் - 1/2 மூடி

கசகசா - 1 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கடைசியில் சேர்க்க:

கொத்தமல்லி - சிறிதளவு

எலுமிச்சைப்பழம் - 1

செய்முறை:

கடலைப்பருப்பினை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

முதலில் மட்டனை சுத்தம் செய்து குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவிடவும். (மட்டனுக்கு 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து வேகவிடவும்)

உருளைக்கிழங்கினை தோல் நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பின்னர் உருளைக்கிழங்கு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து உருளைக்கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிடவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை போட்டு பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது வதக்கி வைத்துள்ள பொருட்களை பிரஷ்ர் குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து கலக்கவும்.

அதன் பிறகு இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் 6 - 10 நிமிடம் வேகவிடவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த பொருட்களை மட்டனில் சேர்க்கவும். இத்துடன் வேகவைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கினை சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையில் 1 தேக்கரண்டி உப்பு (கடலைப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு சேர்ப்பதால்) சேர்த்து கொள்ளவும். சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

கடைசியில் கொத்தமல்லி தூவவும். பரிமாறுவதற்கு சிறிது நேரம் முன்பு இத்துடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கொள்ளவும். இப்பொழுது சுவையான மட்டன் கடலைப்பருப்பு குழம்பு ரெடி.

குறிப்புகள்: