கானாடுகாத்தான் கோழிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

பட்டை - 1

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

தக்காளி - 1

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

மல்லி - 1 கப்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 6

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

சட்டியில் நிறைய எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.

பின்னர் கோழி போட்டு மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

மிக்ஸியில் மல்லி, மிளகு, சீரகம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நைசாக அரைக்கவும்.

கோழி வெந்ததும் அரைத்த கலவையை ஊற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

குறிப்புகள்: