இறால் அவரைக்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 1/4 கிலோ

அவரைக்காய் - 1/4 கிலோ

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மல்லி தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் அடங்கும் வரை வதக்க வேண்டும்.

பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். அவரைக்காய் சேர்த்து வதக்கி எல்லா தூளையும் சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

அவரைக்காய் பாதியளவு வெந்ததும் இறால் சேர்த்து கம்மியான தீயில் கொதிக்க விடவும். இறால் வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: